Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

22.28 சதவீதம் அதிகரிப்பு: ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.16,333 கோடி

22.28 சதவீதம் அதிகரிப்பு: ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.16,333 கோடி

நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, சனிக்கிழமை வெளியிட்ட பங்குச்சந்தை அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐசிஐசிஐ வங்கியின் செப்டம்பர் காலாண்டுக்கான ஒருங்கிணைந்த நிகர லாபம் 22.28 சதவீதம் அதிகரித்து ரூ.16,333.18 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,357.06 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, சனிக்கிழமை வெளியிட்ட பங்குச்சந்தை அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட அடிப்படையிலான நிகர லாபம் 20.1 சதவீதம் உயர்ந்து ரூ.14,843 கோடியை எட்டியது. நிகர வட்டி வருவாய் 17.7 சதவீதம் அதிகரித்து ரூ.25,339 கோடியாக இருந்தது. கடன் தொகுப்பு 30 சதவீதம் வளர்ந்தபோதிலும், நிகர வட்டி வரம்பு 0.12 சதவீதப் புள்ளி குறைந்து 4.18 சதவீதமாக இருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் அந்நியச் செலாவணி வைப்புகளுடன் தொடர்புடைய கடன்களை நீக்கினால், கடன் வளர்ச்சி 24.1 சதவீதமாகும். மொத்த வைப்புகள் 27.1 சதவீதம் உயர்ந்தன. வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புகளைத் தவிர்த்தால் வளர்ச்சி 17 சதவீதமாக இருந்தது. வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட தொகை ரூ.914.11 கோடியிலிருந்து ரூ.850.69 கோடியாகக் குறைந்தது. மொத்த வாராக்கடன் விகிதம் முந்தைய காலாண்டின் 1.38 சதவீதத்திலிருந்து 1.20 சதவீதமாக மேம்பட்டது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மொத்த வாராக்கடன் விகிதம் 1.58 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் 30 நிலவரப்படி, வங்கியின் ஒட்டுமொத்த மூலதனப் போதுமான விகிதம் 16.68 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 15.76 சதவீதமாக இருந்ததாக வங்கி தெரிவித்துள்ளது.



முந்தைய செய்தி
பணவீக்க அச்சத்தைக் கடந்த பங்குச் சந்தை: மீட்சிக்கு வலுசேர்த்த ஐ.டி. துறை
அடுத்த செய்தி
5.55% அதிகரிப்பு: ரூ.20,700 கோடியாக உயர்ந்தது ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம்

தொடர்புடைய செய்திகள்